நீலகிரியில் சுற்றுலா பயணிகள் பெருமளவால் வருகை தருவதால் சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் திட்டத்தை அறிவித்து, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தருகின்றனர். அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகளின் குறைவால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் அவதிப்படுகிறார்கள், மேலும் உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்வதில் சிரமம் அடைகிறார்கள். இதை கணக்கில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம், நீலகிரியில் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் வேண்டும்.அதன்படி முந்தைய 5 மாதங்களில், 2.75 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதே நடைமுறையை மறு அறிவிப்பு வரும்வரை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.