தமிழகத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. இதில் தமிழகத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த உத்தரவு குறித்து கர்நாடகா முதலமைச்சர் மற்றும் சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முறையிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.














