காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

March 24, 2023

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவருத்ரய்யா கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஒட்டிவாக்கம், மாகரல், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர் போன்ற பகுதிகளில் 3 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவருத்ரய்யா கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஒட்டிவாக்கம், மாகரல், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர் போன்ற பகுதிகளில் 3 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் உற்பத்தியை நிறுத்தி வைக்கவும், தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu