ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க உத்தரவு

தமிழக அரசு நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகிறது. தமிழக அரசு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே 2024 ஆம் ஆண்டிற்கும் பச்சரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோம்பு […]

தமிழக அரசு நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகிறது.
தமிழக அரசு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே 2024 ஆம் ஆண்டிற்கும் பச்சரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோம்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மற்றும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 7040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதனால் அரசிற்கு 26 கோடியே 81 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu