ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கும் 100 கடைகள் திறக்க அமுல் நிறுவனம் திட்டம்

July 9, 2024

பால் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான அமுல், ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பிரத்தியேக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை திறக்க உள்ளதாக அமுல் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியில் அமுல் நிறுவனத்தின் முதல் ஆர்கானிக் உணவு பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த […]

பால் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான அமுல், ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பிரத்தியேக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை திறக்க உள்ளதாக அமுல் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியில் அமுல் நிறுவனத்தின் முதல் ஆர்கானிக் உணவு பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விற்பனையகத்தை திறந்து வைத்தார். இதில், பருப்பு, அரிசி மற்றும் மாவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஆர்கானிக் வகையை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆர்கானிக் பொருட்களை அமுல் விற்பனை செய்கிறது. விரைவில், வெல்லம், தேயிலை, சர்க்கரை போன்ற பொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu