தமிழக வெற்றி கழகத்தின் கட்சி மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான பல்வேறு குழுக்களை அமைத்து, மாநாட்டின் தயாரிப்புகளை தீவிரமாகக் கவனித்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்கிற கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், தங்களுக்கேற்ப ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு வந்து, மக்களுக்கு சட்ட ரீதியிலான உதவிகளை வழங்கவுள்ளனர்.