ஒரியனிட் எரி நட்சத்திர நிகழ்வு - நாளை இரவில் தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

October 20, 2023

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில், ஒரியனிட் எரி நட்சத்திர நிகழ்வு நடைபெறும். அந்த வகையில், தற்போது தொடங்கியுள்ள எரி நட்சத்திர நிகழ்வு நவம்பர் 22 ஆம் தேதி வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்று மற்றும் நாளை இரவில், இந்த நிகழ்வை மிகவும் தெளிவாக காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் வடக்கு பகுதியில் இந்த நிகழ்வு தெளிவாக தெரியும் என அவர்கள் கூறியுள்ளனர்.ஹாலி வால் நட்சத்திரத்தின் எஞ்சியுள்ள துண்டுகள் விண்வெளியில் காணப்படுகின்றன. […]

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில், ஒரியனிட் எரி நட்சத்திர நிகழ்வு நடைபெறும். அந்த வகையில், தற்போது தொடங்கியுள்ள எரி நட்சத்திர நிகழ்வு நவம்பர் 22 ஆம் தேதி வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்று மற்றும் நாளை இரவில், இந்த நிகழ்வை மிகவும் தெளிவாக காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் வடக்கு பகுதியில் இந்த நிகழ்வு தெளிவாக தெரியும் என அவர்கள் கூறியுள்ளனர்.ஹாலி வால் நட்சத்திரத்தின் எஞ்சியுள்ள துண்டுகள் விண்வெளியில் காணப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பூமி கடக்கிறது. அந்த சமயத்தில், அவை பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு பூமியில் விழுகின்றன. இதுவே ஒரியனிட் எரி நட்சத்திர நிகழ்வு என அழைக்கப்படுகிறது. வானியலாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வு மிகவும் பிரபலமாகும். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு, அதிக வெளிச்சம் அல்லாத பகுதிக்கு சென்று, நிலவுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்து, அதிக இருட்டில் தெளிவாக காணலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu