தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டம்

December 13, 2022

தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்க்கு DAS உரிமம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 + GST என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு […]

தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்க்கு DAS உரிமம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 + GST என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu