ஐ.ஆர்.சி. டி.சி செயலியில் தனக்கு மட்டும் இன்றி மற்றவர்களுக்கும் இ டிக்கெட் எடுக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்கள் குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுக்க இயலாது என தகவல்கள் வெளியாகி வந்ததை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அமைச்சகம் கூறியதாவது, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களுடைய கணக்கிலேயே மற்றவர்களுக்கும் இ டிக்கெட் எடுக்கலாம். அதன்படி ஒருவரின் கணக்கிலிருந்து மாதத்திற்கு 12 இ டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யலாம். மேலும் கணக்கு வைத்திருப்பர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால் மாதத்திற்கு 24 இ டிக்கெட் வரை எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதித்தாதாக வெளிவரும் தகவல் உண்மையில்லை. மேலும் இதை வணிக ரீதியாக விற்கக் கூடாது. அப்படி செய்வது ரயில்வே சட்டப்படி குற்றச்செயலாவும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது