மத்திய அரசு 18 ஓடிடி தளங்கள் மற்றும் 19 இணையதளங்களை அதிரடியாக முடக்கம் செய்து மற்றும் நீக்கி உள்ளது.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை, ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த பல்வேறு தளங்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 கைபேசி செயலிகள் மற்றும் 57 வலைதள கணக்குகளை இந்த காரணத்திற்காக அதிரடியாக முடக்கி உள்ளது. மேலும், 18 ஓ டி டி தளங்கள் மற்றும் 19 இணையதளங்களை நீக்கி உள்ளது. ஏற்கனவே, ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்புவது குறித்து பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், குறிப்பிட்ட தளங்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவ்வாறான காட்சிகளை ஒளிபரப்பி வந்ததாக தெரியவந்துள்ளது. அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














