500 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை கடந்து லூயி ஊட்டன் சாதனை

April 26, 2023

நேற்று லூயி ஊட்டன் நிறுவனம் 500 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை கடந்துள்ளது. இந்த இலக்கை தாண்டும் முதல் ஐரோப்பிய நிறுவனம் இதுவாகும். இது உலகின் முதல் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்டின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து வரும் லூயி ஊட்டன் நிறுவனம், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில், ஒன்பதாம் இடத்திற்கு முன்னேற உள்ளது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தை முந்தவுள்ளது. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

நேற்று லூயி ஊட்டன் நிறுவனம் 500 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை கடந்துள்ளது. இந்த இலக்கை தாண்டும் முதல் ஐரோப்பிய நிறுவனம் இதுவாகும். இது உலகின் முதல் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்டின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து வரும் லூயி ஊட்டன் நிறுவனம், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில், ஒன்பதாம் இடத்திற்கு முன்னேற உள்ளது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தை முந்தவுள்ளது. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு நிறுவனமான லூயி ஊட்டனின் பங்கு மதிப்பு கடந்த மாதத்தில் 6.9% உயர்வை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் உரிமையாளர் பெர்னாட் அர்னால்டின் சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஆடம்பர பொருட்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளதால், தொடர் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu