வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு வரும் திங்கட்கிழமை முதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க இன்று முதல் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் 547 பேருந்துகள் உரிமம் இன்றி இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இதற்கு முன்னால் பதிவு செய்திருந்தவர்களுக்கும் பாதிப்பு உண்டானது. மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளிமாநில பதிவில் கொண்ட ஆம்னி பேருந்துகள் இன்று முதல் தமிழகத்தில் இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை ஆணையர், ஆம்னி உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து பேச்சுவார்த்தையில் திங்கட்கிழமை வரை பேரன்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது