வட இந்தியாவில் கனமழை - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இமாச்சலப் பிரதேசத்தில், 80 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 31 பேர், நேற்றைய தினம் மட்டுமே உயிர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசம் தவிர, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 5 பேரும், பிற மாநிலங்களில் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மழை காரணமாக […]

பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இமாச்சலப் பிரதேசத்தில், 80 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 31 பேர், நேற்றைய தினம் மட்டுமே உயிர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசம் தவிர, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 5 பேரும், பிற மாநிலங்களில் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சாலைகள் பழுது, பாலங்கள் சிதைவு, வீடுகள் சேதம் போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில், ஜூலை 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இன்றும் நாளையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் அதிகமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu