அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றபின், எலான் மஸ்கின் எக்ஸ் செயலியிலிருந்து 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறினார்கள்.
இது 2022-ல் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை வாங்கிய பின்னர், முதல் முறையாக அதிகளவிலான பயனர்கள் வெளியேறிய சம்பவமாகும். டிரம்பின் ஆதரவாளராக மஸ்க் பிரசாரம் செய்யும் போது, பலர் எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தை விட்டு விலகினர். தேர்தலுக்குப் பிறகு 1.15 லட்சம் பயனர்கள் தங்களின் எக்ஸ் கணக்குகளை செயலிழக்கச் செய்தனர். இதனால், ப்ளூஸ்கை சமூக ஊடகத்தின் பயனர்கள் ஒரு வாரத்தில் 10 லட்சம் அதிகரித்து 1.5 கோடி ஆகினர். ‘தி கார்டியன்’ எக்ஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில், டிரம்ப் மஸ்க்கை அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் தலைவராக நியமித்தார்.