கானுன் சூறாவளி காரணமாக கிழக்கு ரஷ்யாவில் 2,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றபட்டனர்.
கடந்த வாரம் தெற்கு ஜப்பானை கானுன் புயல் தாக்கிய பின்னர், வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மழை பெய்தது.
இந்நிலையில் இன்று கிழக்கு ரஷ்யாவில் இப்புயல் தாக்கியது. இதனால் மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வாழும் பகுதியில் சுமார் 28 குடியிருப்புகள் துண்டிக்கப்பட்டன. அதோடு 15 நகராட்சிகளில் பெரிய சாலைகள் மற்றும் 4,620 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராகிட்னோய் கிராமத்திற்கு அருகிலுள்ள மலினோவ்கா ஆற்றில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற மீட்புப் படையினர் 2,500 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர்.














