நியூசிலாந்து நாடாளுமன்றம் அருகே பழங்குடியின மக்கள் 40,000 பேர் போராட்டம்

November 20, 2024

மாவோரி உரிமைகளை பறிப்பதாகக் கூறி, நியூசிலாந்து நாடாளுமன்றம் அருகே பழங்குடியின மக்கள் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவோரி பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட சில சிறப்பு சலுகைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் புதிய சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி பாடி மாவோரி கட்சி எம்.பி.க்கள் மற்றும் மாவோரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் 9 நாள் நீடித்த பேரணி வெலிங்டனில் முடிவடைந்தது. அதன் இறுதிக்கட்டமாக, […]

மாவோரி உரிமைகளை பறிப்பதாகக் கூறி, நியூசிலாந்து நாடாளுமன்றம் அருகே பழங்குடியின மக்கள் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவோரி பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட சில சிறப்பு சலுகைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் புதிய சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி பாடி மாவோரி கட்சி எம்.பி.க்கள் மற்றும் மாவோரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் 9 நாள் நீடித்த பேரணி வெலிங்டனில் முடிவடைந்தது. அதன் இறுதிக்கட்டமாக, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைநகரில் ஒன்று சேர்ந்து, மாவோரி பாரம்பரிய உடைகள் அணிந்து, கொடிகளை ஏந்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்தில், புதிய சட்டம் மாவோரி உரிமைகளை பறிப்பதாகக் கூறி, பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இது நியூசிலாந்து வரலாற்றின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu