ஜப்பானில் பறவைக்காய்ச்சல் - 57 ஆயிரம் கோழிகள் அழிப்பு

May 3, 2024

ஜப்பானில் பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் பரவியதால் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. ஜப்பானில் உள்ள சிக்கா மாகாணத்தில் டோனிசோடா நகர் உள்ளது. அங்குள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு இறந்தன. இதையடுத்து அந்த கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவற்றிற்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற கோழிகளுக்கு […]

ஜப்பானில் பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் பரவியதால் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன.

ஜப்பானில் உள்ள சிக்கா மாகாணத்தில் டோனிசோடா நகர் உள்ளது. அங்குள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு இறந்தன. இதையடுத்து அந்த கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவற்றிற்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற கோழிகளுக்கு இந்த பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. உடனே இதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்குள்ள சுமார் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. அதேபோல் இந்த பண்ணையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் முட்டைகள் மற்றும் கோழிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu