பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 900 ஆப்கன் அகதிகள்

June 1, 2024

பாகிஸ்தானில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக இதுவரை சுமார் 900 அகதிகள் வெளியேறிவிட்டனர். கடந்த இரு நாட்களில் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 900 பேர் சொந்த நாட்டுக்கு திரும்பினர் என்று அந்நாட்டின் அகதிகள் மற்றும் மறு குடியுரிமை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்கள் தோர்ஹோம் மற்றும் ஸ்பின் போல்டாக் எல்லைப் பகுதிகள் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்தனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு திரும்பும் மக்களுக்கு எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியிலேயே அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து அடிப்படை […]

பாகிஸ்தானில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக இதுவரை சுமார் 900 அகதிகள் வெளியேறிவிட்டனர்.

கடந்த இரு நாட்களில் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 900 பேர் சொந்த நாட்டுக்கு திரும்பினர் என்று அந்நாட்டின் அகதிகள் மற்றும் மறு குடியுரிமை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்கள் தோர்ஹோம் மற்றும் ஸ்பின் போல்டாக் எல்லைப் பகுதிகள் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்தனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு திரும்பும் மக்களுக்கு எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியிலேயே அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து அடிப்படை வசதிகளை அளிக்க ஆப்கன் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் கட்டமைக்க ஆப்கனிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை ஆப்கன் அரசு திரும்ப அழைத்துள்ளது.

கடந்த மார்ச் 21, 2023 முதல் மார்ச் 19, 2024 காலகட்டத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சொந்தநாடு திரும்பியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu