ஹங்கேரி - கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 750 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விடுதலை

June 1, 2023

ஹங்கேரி நாட்டில், கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 777 வெளிநாட்டினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஹங்கேரி நாட்டின் சிறை பிரிவு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதர்களை கடத்திய குற்றங்களுக்காக, ஹங்கேரி சிறையில் மொத்தம் 2636 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் 808 பேர் வெளிநாட்டினர். அவர்களில் பலர் விடுதலை செய்யும் தகுதி கொண்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டு சிறைகளில் அதிகமானோர் தண்டனை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், சிறை நிரம்பி வழிவதாக தகவல் வெளிவந்துள்ளது. […]

ஹங்கேரி நாட்டில், கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 777 வெளிநாட்டினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஹங்கேரி நாட்டின் சிறை பிரிவு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதர்களை கடத்திய குற்றங்களுக்காக, ஹங்கேரி சிறையில் மொத்தம் 2636 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் 808 பேர் வெளிநாட்டினர். அவர்களில் பலர் விடுதலை செய்யும் தகுதி கொண்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஹங்கேரி நாட்டு சிறைகளில் அதிகமானோர் தண்டனை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், சிறை நிரம்பி வழிவதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய திட்டமிட்டு, அந்நாட்டின் அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட பொள்அண்டை நாடுகளில் இருந்து இந்த கடத்தல் சம்பவங்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, விடுதலை செய்யப்படும் அவர்கள், 72 மணி நேரத்திற்குள் ஹங்கேரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அதற்குள்ளாக காவல்துறையினரிடம் பிடிபட்டால், மீண்டும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu