அயோத்தியில் 50 புதிய ஹோட்டல்கள் - ஓயோ திட்டம்

April 20, 2023

இந்தியாவைப் பொறுத்தவரை, ஓட்டல் வர்த்தகத்தில் ஓயோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது, இந்த நிறுவனம், அயோத்தியில் 50 புதிய ஹோட்டல்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள், இந்த ஹோட்டல்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மேம்பாட்டு ஆணையம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, ஓயோ நிறுவனம் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள 50 ஓட்டல்களில், 25 ஹோட்டல்கள், வீடுகளில் தங்கும் படி, அந்தந்த வீட்டு உரிமையாளர்களால் இயக்கப்படும் என […]

இந்தியாவைப் பொறுத்தவரை, ஓட்டல் வர்த்தகத்தில் ஓயோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது, இந்த நிறுவனம், அயோத்தியில் 50 புதிய ஹோட்டல்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள், இந்த ஹோட்டல்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மேம்பாட்டு ஆணையம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, ஓயோ நிறுவனம் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட உள்ள 50 ஓட்டல்களில், 25 ஹோட்டல்கள், வீடுகளில் தங்கும் படி, அந்தந்த வீட்டு உரிமையாளர்களால் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஓட்டல்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலானவையாக இருக்கும்; ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 அறைகள் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது, அயோத்தியில், வெறும் 5 ஹோட்டல்கள் ஓயோ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில், ராமர் கோவில் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக மாறவுள்ளது. எனவே, இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu