அண்டார்டிகாவுக்கு மேலே உள்ள ஓசோன் படல ஓட்டை மிகவும் விரிவடைந்து, உலக வரலாற்றில் மிகப்பெரியதாக உள்ளது என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.அண்டார்டிகாவுக்கு மேல் உள்ள ஓசோன் படலத்தில் நெடு நாட்களாக ஓட்டை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். தற்போது, இதன் அளவு மிகப்பெரியதாக விரிவடைந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, இதன் அளவு 26 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவில் இருந்ததாக கூறியுள்ளது. இது பிரேசில் நாட்டை விட 3 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழாண்டில், ஓசோன் படல ஓட்டை மிகவும் வேகமாக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உலக வரலாற்றில் மிகப்பெரிய ஓசோன் படல ஓட்டையாக இது இடம் பிடித்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் ஓசோன் அளவு இயல்பு நிலைக்கு வரும் என நம்புவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.