இதய நோய்கள் அதிகரிப்பதற்கு ஓசோன் மாசு காரணம் - ஆய்வுத் தகவல்

இதய நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு, ஓசோன் மாசு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தி ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னல் என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை இது குறித்த விரிவான தகவல்களை கூறுகிறது. மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரிப்பதற்கு, உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள ஓசோன் அளவை தாண்டிய ஓசோன் மாசு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காலநிலை மாற்றம் […]

இதய நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு, ஓசோன் மாசு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தி ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னல் என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை இது குறித்த விரிவான தகவல்களை கூறுகிறது.

மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரிப்பதற்கு, உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள ஓசோன் அளவை தாண்டிய ஓசோன் மாசு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காலநிலை மாற்றம் காரணமாக தீவிரமான ஓசோன் மாசு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், மனிதர்களுக்கு விரைவாகவே முதுமை ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓசோன் என்பது காற்றில் காணப்படும் வாயு ஆகும். இது வளிமண்டல மேலடுக்கில் உள்ள ஓசோன் மண்டலத்திற்கு வேறுபட்ட வாயுவாகும். வாகன புகை, குளிர்பதன பெட்டிகள், பாய்லர்கள், ரசாயன தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அதிக அளவிலான ஓசோன் வெளியேற்றப்படுவதால், காற்றில் அதிக அளவில் மாசு உள்ளது. எனவே, இதனை அதிகமாக சுவாசிக்கும் மக்களுக்கு மற்றவர்களை விட, நோய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu