சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பதவியேற்பு

March 27, 2023

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலையை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு […]

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பதவியேற்றுக்கொண்டார்.

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலையை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu