நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு 5.62% சரிவு: கரும்பு, பருத்தி சாகுபடி அதிகரிப்பு

September 3, 2022

நாடு முழுவதும் நெல் சாகுபடியானது 5.62 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி சிறிதளவு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு 384 ஹெக்டராக குறைந்துள்ளது. நெல் சாகுபடி பரப்பளவு தெலுங்கானா, […]

நாடு முழுவதும் நெல் சாகுபடியானது 5.62 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி சிறிதளவு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு 384 ஹெக்டராக குறைந்துள்ளது.

நெல் சாகுபடி பரப்பளவு தெலுங்கானா, அரியானா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்தும், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்தும் காணப்படுகிறது.

உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக நெல் சாகுபடி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடப்பாண்டில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யப்படும் பரப்பும் சிறிதளவு குறைந்துள்ளது. எனினும் கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி பரப்பளவு சிறிய அளவில் அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu