கீழடி அருகே அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் நெல்மணிகள்

September 17, 2022

கீழடியில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள், முதன்முறையாக நெல்மணிகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்தபோது 74 சூதுபவள மணிகள் புதைவிட தள ஆய்வில் முதன்முதலாக கிடைத்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் சில முதுமக்கள் […]

கீழடியில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள், முதன்முறையாக நெல்மணிகள் கிடைத்துள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்தபோது 74 சூதுபவள மணிகள் புதைவிட தள ஆய்வில் முதன்முதலாக கிடைத்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் சில முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டன. ஒரு தாழியினுள் இறந்தவரின் எலும்புகளுடன், சிறியதும், பெரியதுமான 19 சுடுமண் குடுவைகளில் இறந்தவருக்கு பிடித்தமான பொருட்கள் வைத்து புதைக்கப்பட்டிருந்தது. அத்துடன் தாழிக்குள் மட்கிய நிலையில் நெல்மணிகளும், உமிகளும் அதிக அளவில் இருந்தன. கீழடி அகழாய்வில் நெல்மணிகள் கிடைப்பது இதுவே முதல்முறை என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu