படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார் ஏப்ரல் 29, இந்தியா படிதார் சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான சர்தார்தம் ‘மிஷன் 2026’ இன் கீழ் GPBS ஐ ஏற்பாடு செய்தி௫க்கிறது. இதற்கு முந்தைய இரண்டு உச்சி மாநாடுகள் 2018 மற்றும் 2020 இல் காந்திநகரில் நடைபெற்றன, தற்போதைய உச்சி மாநாடு இப்போது சூரத்தில் நடைபெறுகிறது.இந்த உச்சிமாநாட்டை இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த உச்சிமாநாடு சமூகத்திற்குள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; புதிய தொழில்முனைவோரை ஆதரித்து, படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பெரிதும் உதவும். மேலும் ஏப்ரல் 29 முதல் மே 1 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் உச்சி மாநாடு, அரசின் தொழில் கொள்கை, MSMEகள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.