அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. இது குறித்து நீதிபதிகள் அமீர் பருக், மியான் குல் ஹசன், ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வெளியிட்டது. நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் 12 வது, பதினான்காவது, இருபதாவது பிரதமராக பதவி வகித்தவர். பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.