தங்கள் மாகாணத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருக்கும் ஆப்கன் அகதிகளை தினந்தோறும் பத்தாயிரம் பேர் வீதம் வெளியேற்ற பலூசிஸ்தான் மாகாணம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த அரசின் செய்தி தொடர்பாளர் ஜன் அசாத் சாய் கூறியதாவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கும் ஆப்கன் அகதிகளை தேடுமாறு காவல்துறைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. தினந்தோறும் பத்தாயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி தற்போது பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு மனித உரிமை அமைப்புகளும் தலிபான் அரசும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேலான அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏராளமான அகதிகள் இந்த வெளியேற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று விட்டனர். ஆகையால் அவர்களை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் பத்தாயிரம் அகதிகளையாவது வெளியேற்ற வேண்டும் என்று பலூசிஸ்தான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று கூறப்படுகிறது.