கிட்டத்தட்ட 53 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நேரடி கடல் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தினாலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு போரின் பின்னர், வங்கதேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான்-வங்கதேச கடல் வர்த்தகம், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும் என இந்தியா கருதுகிறது. வங்கதேசம் வழியாக பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரிவினைவாத போக்கு மற்றும் கலவரங்கள் பாகிஸ்தானின் ஆதரவுடன் மேலும் வலுப்பெறும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்திய அரசு இந்த நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறது.