உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 13 வது தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து,பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒவ்வொரு அணி மற்ற அணிகள் உடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் லீக் சுற்றின் முடிவில் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 345 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.














