இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது ஆனால் நாம் நிதிக்கு கையேந்துகிறோம் - நவாஸ் ஷெரீப்

September 20, 2023

இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது. ஆனால் நாமோ உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்தி கொண்டிருக்கிறோம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார். பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் கர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பாகிஸ்தானில் நிதி நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான வரி அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் […]

இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது. ஆனால் நாமோ உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்தி கொண்டிருக்கிறோம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.
பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் கர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பாகிஸ்தானில் நிதி நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான வரி அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்டோபர் 21ம் தேதி பாகிஸ்தான் திரும்புவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், லண்டனில் இருந்து காணொளி வாயிலாக தன் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானில் பொருளாதாரம் பல ஆண்டுகளாக கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் இந்தியா ஜி-20 மாநாட்டிற்கு தலைமை ஏற்று, நிலவில் கால் பதித்து, எங்கோ சென்று விட்டது. ஆனால் நாமோ உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்தி கொண்டிருக்கிறோம். இந்தியா செய்துள்ள சாதனைகளை நாம் ஏன் செய்ய இயலவில்லை? வரும் தேர்தலில் நம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu