இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் விமானம் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. “ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பக்திகா ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் இந்த நடவடிக்கைக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.” என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டதில் இருந்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, எல்லை பகுதியில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் இருநாட்டுக்கும் இடையில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.