4.8 பில்லியன் டாலர் அணுமின் நிலைய ஒப்பந்தம் - சீனா, பாகிஸ்தான் நாடுகள் கையெழுத்து

June 21, 2023

பாகிஸ்தானில் 1200 மெகாவாட் திறனில் புதிய அணுமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே 4.8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தானில் சீன நிறுவனங்கள் வரவேற்கப்படுவது உலகிற்கு எடுத்துரைக்கப்படுவதாக கூறியுள்ளார். Chashma 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அணுமின் நிலைய திட்டம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானின் மொத்த […]

பாகிஸ்தானில் 1200 மெகாவாட் திறனில் புதிய அணுமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே 4.8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தானில் சீன நிறுவனங்கள் வரவேற்கப்படுவது உலகிற்கு எடுத்துரைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

Chashma 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அணுமின் நிலைய திட்டம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானின் மொத்த அணுமின் நிலைய உற்பத்தி 1400 மெகாவாட் ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானில் சீனா உதவியுடன் மற்றொரு அணுமின் நிலையம் கட்டமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய அணுமின் நிலைய திட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu