பாகிஸ்தானில் இன்று பொதுத் தோ்தல்

February 8, 2024

பாகிஸ்தானில் இன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. பாகிஸ்தானின் 16 வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி அறிவித்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்சி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 5 மணி வரை நடைபெறும். நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் வாக்களிக்க […]

பாகிஸ்தானில் இன்று பொது தேர்தல் நடைபெறுகிறது.

பாகிஸ்தானின் 16 வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி அறிவித்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்சி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 5 மணி வரை நடைபெறும். நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் வாக்களிக்க 12.85 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தற்போது பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் காணப்படுகிறது. ஆகையால் நாடு முழுவதும் சுமார் 6.5 லட்சம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. நேற்று பலூஜிஸ்தான் மாகாணத்தில் இரட்டை வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu