பாகிஸ்தானில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு

February 9, 2024

பாகிஸ்தானில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 66 நாடாளுமன்ற தொகுதிகள் காண முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 22 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, தேர்தல் முடிந்தும் 15 மணி நேரமாக எந்தவித அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது. […]

பாகிஸ்தானில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 66 நாடாளுமன்ற தொகுதிகள் காண முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 22 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, தேர்தல் முடிந்தும் 15 மணி நேரமாக எந்தவித அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது. இதற்கு அனைத்து கட்சிகளும் குறை கூறின. அதனையடுத்து முடிவுகளை வேகமாக அறிவித்து வருகிறது தேர்தல் ஆணையம். பாகிஸ்தானில் மொத்தம் 265 மக்களவை தொகுதிகள் உள்ளது. இதில் 130 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu