பாகிஸ்தானில் மார்ச் 9-ல் அதிபர் தேர்தல்

February 26, 2024

பாகிஸ்தானில் மார்ச் ஒன்பதாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், மார்ச் 9 அல்லது 10ஆம் தேதி பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட இருக்கிறது. தேசிய மற்றும் மாகாண பேரவை உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று கூறினார். பாகிஸ்தான் மேலவையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் 50 சதவீத உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் […]

பாகிஸ்தானில் மார்ச் ஒன்பதாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், மார்ச் 9 அல்லது 10ஆம் தேதி பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட இருக்கிறது. தேசிய மற்றும் மாகாண பேரவை உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று கூறினார். பாகிஸ்தான் மேலவையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் 50 சதவீத உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

முன்னதாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமராவதற்கு ஆறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் அதிபர் தேர்தலுக்கு இக்கூட்டணியின் சார்பில் பீலாவல் பூட்டோ ஜர்தா சர்தார் இன் தந்தை யும் முன்னாள் பிரதமர் பெனசீர் ஃபோட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தார் போட்டிடுவார் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசமைப்பு விதியின் கீழ் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார். அதோடு அடுத்த அதிபர் தேர்தல் நடைபெறும் வரை அவரே அப்பதவியில் நீடிக்கலாம் என்று உள்ளது. அந்த வகையில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வின் பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்த போதிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu