பாகிஸ்தான் நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், நெடு நாட்களாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், தற்போது, 9852 கோடி ரூபாய் கடன் தொகை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் நிதி அமைச்சர் இஷாக் தார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, பாகிஸ்தான் நாட்டுக்கு 300 கோடி டாலர் குறுகிய கால கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக, 120 டாலர் கடன் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மீதமுள்ள 180 கோடி டாலர் நிதி விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். எனவே, பாகிஸ்தான் நாடு திவால் நிலைக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது.