பாகிஸ்தான் - தேர்தலுக்காக அமைச்சரவை முன்கூட்டியே கலைப்பு

July 19, 2023

பாகிஸ்தான் நாட்டில், வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நாட்டின் அமைச்சரவை முன்கூட்டியே கலைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சட்டப்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அல்லது, நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். எனவே, பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி கட்சிகள், ஆகஸ்டில் நாடாளுமன்றத்தை கலைத்து நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்றத்தின் […]

பாகிஸ்தான் நாட்டில், வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நாட்டின் அமைச்சரவை முன்கூட்டியே கலைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சட்டப்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அல்லது, நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். எனவே, பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி கட்சிகள், ஆகஸ்டில் நாடாளுமன்றத்தை கலைத்து நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளன.

வரும் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 8ம் தேதியே அமைச்சரவையை கலைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப், நாடாளுமன்ற கலைப்பு தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu