பாகிஸ்தான்: இன்சுலின் உள்ளிட்ட முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும் அவல நிலை

February 27, 2023

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையானது, அந்நாட்டின் சுகாதாரத்துறையை பெருமளவு பாதித்துள்ளது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளதால், மருந்து பொருட்களை இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில், 2 வாரத்திற்கும் குறைவான அளவிலேயே அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்படும் மயக்க மருந்து உள்ளிட்ட மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை மிகவும் அவசியமான, […]

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையானது, அந்நாட்டின் சுகாதாரத்துறையை பெருமளவு பாதித்துள்ளது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளதால், மருந்து பொருட்களை இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில், 2 வாரத்திற்கும் குறைவான அளவிலேயே அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்படும் மயக்க மருந்து உள்ளிட்ட மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை மிகவும் அவசியமான, உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மருந்து உற்பத்திக்குத் தேவைப்படும் 95% மூலப்பொருட்கள், இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, கராச்சி துறைமுகத்தில் மருந்து மூலப் பொருட்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நாட்டில் செயல்பட்டு வரும் மருந்து கடைகளில், இன்சுலின், ப்ரூபன் டைஸ்பெரின், கால்பால் உள்ளிட்ட வழக்கமான மற்றும் அத்தியாவசியமான மருந்துகளும் இருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu