பாகிஸ்தான் - இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய லாகூர் நீதிமன்றம்

March 18, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான குற்ற வழக்குகளில் பதில் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவரை கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறை முயற்சி செய்தது. இந்த முயற்சியின் போது வன்முறை வெடித்தது. எனவே, அவரை கைது செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இம்ரான் கான் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார். காவல்துறையினர் தன்னை கைது செய்வது போல் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவர் குற்றம் […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான குற்ற வழக்குகளில் பதில் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவரை கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறை முயற்சி செய்தது. இந்த முயற்சியின் போது வன்முறை வெடித்தது. எனவே, அவரை கைது செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று இம்ரான் கான் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

காவல்துறையினர் தன்னை கைது செய்வது போல் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தன் மீதான 9 குற்ற வழக்குகளில் இருந்து ஜாமின் கேட்டு ஏற்கனவே லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பெயரில், அவருக்கு அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்ற வழக்குகளில், பிரச்சாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்தது, பிரதமராக இருந்த போது கிடைக்கப் பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்தது, உள்ளிட்ட வழக்குகள் அடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu