பாகிஸ்தான்: பணவீக்கம் 47% ஆக உயர்வு - முட்டை, கோதுமை விலைகள் வரலாறு காணாத உச்சம்

March 27, 2023

மார்ச் 22ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 47% உயர்வை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக, வெங்காயம் 228.28%, கோதுமை மாவு 120.66%, சிகரெட்கள் 165.85%, வாழைப்பழங்கள் 89.84%, பெட்ரோல் 81.17%, டீசல் 102.84%, முட்டை 79.56% விலை உயர்வை பதிவு செய்துள்ளன. இதனால், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நிலை மேலும் அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து […]

மார்ச் 22ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 47% உயர்வை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக, வெங்காயம் 228.28%, கோதுமை மாவு 120.66%, சிகரெட்கள் 165.85%, வாழைப்பழங்கள் 89.84%, பெட்ரோல் 81.17%, டீசல் 102.84%, முட்டை 79.56% விலை உயர்வை பதிவு செய்துள்ளன. இதனால், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நிலை மேலும் அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெறுவது தாமதமாகி வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்களின் புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, “எரி பொருளுக்கான விலைகள் உயர்த்தப்பட்டு, அதில் சேமிப்பாகும் பணம் ஏழைகளின் நலனுக்கு செலவிடப்படும்” என்று பிரதமர் சபாஷ் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu