பாகிஸ்தானின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் - சீனாவில் இருந்து ஏவப்பட்டது

பாகிஸ்தான் நாடு சீனாவின் உதவியுடன் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளது. பாகிஸ்தானில், வேகமான இணைய சேவைகளை வழங்குவதற்காக புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. பாக்சாட் எம் எம் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் சீனாவில் உள்ள ஜிஸாங்க் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த செயற்கைக்கோளின் பயன்பாடு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

பாகிஸ்தான் நாடு சீனாவின் உதவியுடன் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

பாகிஸ்தானில், வேகமான இணைய சேவைகளை வழங்குவதற்காக புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. பாக்சாட் எம் எம் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் சீனாவில் உள்ள ஜிஸாங்க் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த செயற்கைக்கோளின் பயன்பாடு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் இக்பால், “விரைவில் தனது சொந்த ராக்கெட் மூலம் பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu