பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக அசீம் முனீர் நியமனம்

November 25, 2022

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஷம்ஷத் மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப், இவர்களுக்கு பணி நியமனம் செய்ததாக, பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் வரும் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ராணுவத் தளபதி […]

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஷம்ஷத் மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப், இவர்களுக்கு பணி நியமனம் செய்ததாக, பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் வரும் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ராணுவத் தளபதி நியமனத்திற்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கியுள்ளார். பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவத் தளபதிக்குதான் கூடுதல் அதிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu