பாகிஸ்தான் - நூற்றுக்கும் மேற்பட்ட கவுடர் போராட்டக்காரர்கள் கைது - 5 வது நாளாக செல்லுலார் சேவை முடக்கம்

December 31, 2022

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுடர் துறைமுகத்தில், கடந்த 2 மாதங்களாக, கவுடர் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் மற்றும் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக, போராட்டங்கள் வலுத்த நிலையில், அங்கு 144 தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அங்கு HDT சார்பில் போராட்டங்கள் நடைபெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் கைது செய்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கவுடர் நகரத்தில், […]

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுடர் துறைமுகத்தில், கடந்த 2 மாதங்களாக, கவுடர் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் மற்றும் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக, போராட்டங்கள் வலுத்த நிலையில், அங்கு 144 தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அங்கு HDT சார்பில் போராட்டங்கள் நடைபெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் கைது செய்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கவுடர் நகரத்தில், வர்த்தக மையங்கள், விற்பனையகங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்து 5 நாட்களாக அங்கு இணைய சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu