பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி - ஷெபாஸ் ஷெரிப் பிரதமர்

February 21, 2024

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. […]

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி செய்ய உள்ளன. இதனை இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். அதிபராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பீலாவல் பூட்டோ சர்தாரி கூறியுள்ளார். மேலும் இவர் இந்த கூட்டணி அரசை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu