பாகிஸ்தானில் சரப்ஜித் கொலையாளி சுட்டுக்கொலை

April 15, 2024

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை கைதியான இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் கொலையில் தொடர்புடைய அமீர் சர்ப்ராஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங்கின் கொலையாளி லாகூரில் மர்ம நபர்களால் கடந்த நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாணத்தில் 1990-ல் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. அதில் இந்தியர் சரப்ஜித் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சரப்ஜித் […]

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை கைதியான இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் கொலையில் தொடர்புடைய அமீர் சர்ப்ராஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங்கின் கொலையாளி லாகூரில் மர்ம நபர்களால் கடந்த நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாணத்தில் 1990-ல் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. அதில் இந்தியர் சரப்ஜித் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சரப்ஜித் சிங்கை அமீர் சர்பராஸ் சம்பா உள்ளிட்ட சில சிறைக்கைதிகள் கடுமையாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த சரப்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு அவர் கடந்த 2013 மே இரண்டில் மாரடைப்பால் பலியானார். சிங்கை கொலை செய்த அமீர் லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் சையதுக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படுகிறார்.

இந்நிலையில், நேற்று லாகூரின் இஸ்லாம்புரா பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்து அமீரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமீர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu