பாகிஸ்தானில் 125 டிகிரி வெயில்

May 28, 2024

பாகிஸ்தானில் 126 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது. கடந்த சில நாட்கள் ஆகவே பாகிஸ்தானில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சிந்துவில் உள்ள மொகஞ்சதாரோவில் 126 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை […]

பாகிஸ்தானில் 126 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே பாகிஸ்தானில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சிந்துவில் உள்ள மொகஞ்சதாரோவில் 126 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. இந்த வெயிலின் தாக்கத்தால் பலர் உடல் நிலை பாதித்து வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் சர்தார் சர்ப்பராஜ் கூறுகையில், பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலிச்சிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் 129.2 டிகிரி வெயில் பதிவானது அதிகபட்சமாகும். இது உலகின் நான்காவது அதிக வெப்ப பதிவாகும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu