மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களுக்கு தடை

July 5, 2024

பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு ஆறு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மொகரம் பண்டிகை முன்னிட்டு ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலகட்டத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெரும்பாலான மக்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். மொகரம் பண்டிகையை […]

பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு ஆறு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மொகரம் பண்டிகை முன்னிட்டு ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலகட்டத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெரும்பாலான மக்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். மொகரம் பண்டிகையை முன்னிட்டு வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ்-இன் சட்டம் ஒழுங்கிற்கான கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu