பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தலீபான் அமைப்பின் முகாம்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள வாரிஸ்தான் அகதிகள் பலர் உயிரிழந்ததாக தலீபான் அரசு தெரிவித்தது. இதன் பின்னர், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சில இடங்களில் தலீபான்கள் பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடிகளை தாக்கினர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 8 தலீபான்கள் பலியானதாகவும், பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.