ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமரின் நெருடலான தருணம்

September 16, 2022

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் ஹெட்ஃபோன் கீழே விழுந்த நெருடலான நிகழ்வு நடந்தேறியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 22வது உச்சிமாநாடு சமர்கண்டில் நடந்தது. அச்சமயம் பேச்சுவார்த்தையின் போது, ​​புடின் ஷெரிப்பிடம் பேசுவதற்காக காத்தி௫ந்தார். அப்போது தனது ஹெட்போனை சரிசெய்து விட்டு பேசத் தொடங்கிய போது ஷெரிப்பின் காதில் இருந்து ஹெட்போன் தவறி விழுந்தது. இதை கண்ட புடின் கேலியாக சிரித்ததாக செய்தி அறிக்கை கூறுகிறது . இது […]

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் ஹெட்ஃபோன் கீழே விழுந்த நெருடலான நிகழ்வு நடந்தேறியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 22வது உச்சிமாநாடு சமர்கண்டில் நடந்தது. அச்சமயம் பேச்சுவார்த்தையின் போது, ​​புடின் ஷெரிப்பிடம் பேசுவதற்காக காத்தி௫ந்தார். அப்போது தனது ஹெட்போனை சரிசெய்து விட்டு பேசத் தொடங்கிய போது ஷெரிப்பின் காதில் இருந்து ஹெட்போன் தவறி விழுந்தது. இதை கண்ட புடின் கேலியாக சிரித்ததாக செய்தி அறிக்கை கூறுகிறது . இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள், ஷெரீப்பால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் விமர்சித்தனர். இதேபோல் மற்றொரு நாட்டின் பிரதமர் ஷெரிப்பின் குழு புகைப்படத்தை பகிர்ந்து விமர்சித்ததாக ௯றப்படுகிறது. மாநாட்டில் ஷெரீப்புடன், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆகியோர் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu